முடிச்சுகளை அவிழ்த்துச் சில புதிர்களை விளங்கவைப்பது மட்டுமன்று கவிதை, போகிறபோக்கில் புதிய முடிச்சுகளைப் போட்டுவிடுவதும்தான் கவிதை. இவை நமக்குப் பிடிபடாத அவஸ்தைகளை மனத்தில் ஏற்றிவிடுகின்றன.<o:p></o:p>
வாப்பாவின் மூச்சு நம்மீது படரவிடும் வெம்மை இச் சமூகத்தின் மீதான விமர்சனமாகின்றது. ஒரு கவிஞன் தன்னிலையில் உணரும் தனிமையைச் சமூகத்தின் தனிமை யாகவும் மாற்ற அவனுக்கு உரிமையுண்டு. அந்த உரிமையை முழுதாக எடுத்துக்கொண்டிருக்கின்றன இக்கவிதைகள்.<o:p></o:p>
- களந்தை பீர்முகம்மது